Prose and Poetry
வீறு கொண்டெழு மனமே- Abhinaya B
வீறு கொண்டெழு மனமே
வீறு கொண்டெழு மனமே நீ!
விழுந்துவிடுவாய் எனசொன்னோர் முன் வாழ்ந்துக்காட்ட!
வீறு கொண்டெழு மனமே நீ!
உன்னால்முடியாது எனசொன்னோர் முன் உயர்ந்துநிற்க!
வீறு கொண்டெழு மனமே நீ!
விதையாய் புதைந்து ஆலமரமாய் எழும்ப!
வீறு கொண்டெழு மனமே நீ!
வீரத்தோடு வரலாற்றில் உன் காலடி பதிக்க!
வீறு கொண்டெழு மனமே நீ!
வாழ்வில்உயர வறுமை தடையில்லை எனக்காட்ட!
விழுந்தப்பின் மேலேஎழுவது கடினமாக இருக்கலாம்!
விழிகள் முழுதும் கண்ணீரால் நிறைந்திருக்கலாம்!
உடலிலும் மனதிலும் காயங்கள்பல பட்டிருக்கலாம்!
அனைத்தையும் துடைத்துவிட்டு எழு என்மனமே!
உன்வாழ்வில் உயர்வுவரும் அடுத்த கனமே!
உன்வாழ்வு முன்னேற உன்கனவு நிறைவேற!
எழுச்சிமிக்க அடுத்தச்சமூகத்தின் தூணாக எழுந்துநில்!
இகழ்ந்தோர் முன் இமயமாய் நிமிர்ந்துநில்!
வாழ்வில் வெற்றிபெற்று வீரத்தோடு சொல்!
பாரதியின் வரிகளான,
நான்வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று!