- bhelwindeva
இதயத்துடிப்பு மானி நபராக இருந்தால் - by Velayudham 2021 batch
அன்று என் கனவில்
இதயத்துடிப்பு மானி மனிதனாய்க் கண்ணெதிரே
தன்னை ஒரு கவிதையாய் மொழியவே
"அகக்குரலைக் கேட்கும் மருத்துவனின்
செவிளாய் நான்,
கழுத்தில் என்னைச் சுமக்கும் தோழனாய் நீ,
உன் வாழ்வின் அங்கமாய் நான் இருக்கவே
அந்த இறைவனும் விதித்தானோ?"
எனக் கூறவே நிலை மறந்து ரசிக்கும்
மருத்துவனாய் நின்றேன்.
-வேலாயுதம்