Prose and Poetry
இதயத்துடிப்பு மானி ஒரு நபராக இருந்தால்- Vignesh Muthusamy 2019 batch
இதயதுடிப்பு மானி உங்களுக்கு தெரிஞ்ச மொழில stethoscope
ரப்பர்லயும் பிளாஸ்டிக்லயும் இப்போ இருக்க என் வாழ்க்கை தொடங்குனது ஒரு பேப்பர்ல தான்.....ஆமாங்க உண்மைதான்
ஒரு நாள் ஒரு டாக்டர் ஒரு 25 வயசு பெண்ணோட நெஞ்சுல காது வச்சு இதய துடிப்பை கேட்க, அவள் வெட்கப்பட, அவரு காலைல இரண்டு பசங்க பேப்பர் கப் ல நூலை கட்டி ஒரு பக்கம் பேசி இன்னொரு பக்கம் கேட்டது ஞாபகம் வந்தது , அதே மாதிரி பண்ண நெனச்சு , பேப்பரை சுத்தி அந்த பெண்ணோட இதய துடிப்பை கேட்டாரு இப்போ நல்லா தெளிவாவே கேட்டுச்சு , இப்படிதா நான் உருவானேன் அதுக்கு அப்புறம் மரத்துல அப்படியே படி படி யா ரப்பர் பிளாஸ்டிக்னு 2௦௦ வருஷத்துல எவ்வளவோ மாறிட்டேன், ஆனா என்னோட பயன்பாடு குறையல , தேவையும் அழியல
ஒருத்தன் மருத்துவ மாணவனாக கல்லூரில சேர்ந்த அப்போ அவன் நண்பன் முதல் முறையை இதய துடிப்பை கேட்டான் , அப்போ அவன் முகத்துல இருக்க சிரிப்பும் சந்தோஷமும் எப்பவும் இருக்கனும்னு ஆசையா இருக்கும் எனக்கு , ஆனா எல்லோர் வாழ்க்கையும் நல்ல போறது இல்ல,சில நேரங்களில் , வாழ்க்கை ஓட கடைசி நிமிஷத்துல இதய துடிப்பு இருக்கானு பாக்குற அப்போ, நா உண்மை தெரிஞ்சும் , ஏதாச்சு அதிசயம் நடக்காது னு போய் பார்த்து , உண்மைய சொல்ல முடியாம , சொல்லி அத அந்த , யாரோ ஒருத்தர் ஓட அப்பாவா , அண்ணாவா வாழ்க்கைல இன்னும் எவ்வளவோ பாக்க வேண்டியவர் ஓட சொந்த காரங்க கிட்ட “ இல்ல அவ்ளோதான்” னு சொல்ற அப்போ இருக்க வேதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது
எது எப்படியோங்க வாழ்க்கைல எல்லாருடைய இதய துடிப்பையும் ஒரு முறை ஆச்சு கேட்ருப்பேன் னு சந்தோசம் எனக்குள்ள எப்போதும் இருக்கும்